பணம் என்பது என்ன? ஒவ்வொருவருக்கு ஒன்று. ஏழைக்கு வயிறு நிரம்பத் தேவையான பொருள். பணக்காரனுக்கு சொத்து சேர்க்கத் தேவையான பொருள். நடுத்தர வர்க்கத்தினருக்கு துரத்த வேண்டிய பொருள். சுருக்கமாக சொன்னால், அளவுக்கு அதிகமாய் இருந்தாலும் சரி, அளவுக்கு குறைவாக இருந்தாலும் சரி நிம்மதியை தொலைதூரம் தள்ளும் சக்தி படைத்த சாதனம். அப்படி என்றால் எது அளவு? இவ்வளவு பணம் ஒருவரிடம் இருக்கலாம் என்பதை எந்த அளவுகோல் கொண்டு அளப்பது? வாழ்வின் முக்கிய Preoccupation பணம் பண்ணுவதாகவே எல்லோரும் நினைப்பார்களோ? இன்றைய கல்விப் பாடத்திட்டம் அப்படித்தானே வடிவமைக்கப் பட்டுள்ளது? அதிகம் பணம் பண்ணும் வேலைகளுக்கு தேவையான படிப்பைத்தானே தேர்ந்தெடுக்கச் சொல்லி குழந்தைகள் அறிவுறுத்தப் படுகிறார்கள்? தேவைக்கு சம்பாதிக்க வேண்டுமா? அதற்கு மேலா ? தேவையையும், ஆசையையும் பிரிக்கும் மெல்லிய நூல் எது? அது யார் கற்றுத் தந்து வரும்? இல்லை, தானாகவே புரியுமா? எப்பவானும் இது போதும் என்று தோன்றுமா, இல்லை அப்படித் தோன்ற வாய்ப்பில்லையா?
தான் ஈட்டும் பணம் முழுவதையும் செலவழித்து tally பண்ணி விட்டு உலகத்தில் இருந்து விடை பெற்ற யாரும் இல்லை. அப்படியானால் அதன் மேல் எவ்வளவு பற்று வைக்கலாம்? பணத்தின் ஆச்சரியமான குணமே, ஏழையை மனதில் பணக்காரனாகவும், பணக்காரனை மனதில் நித்ய ஏழையாகவும் வைத்திருப்பதே. வங்கி கணக்கில் கோடிகளை தேக்கி வைத்து விட்டு, மேலும் மேலும் பணம் பண்ண ஓடுபவனை உலகம் அண்ணாந்து பார்க்கிறது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு உழைப்பவனை துச்சமாகப் பார்க்கிறது. பணத்தைக் கொட்டிக் கொடுத்து வேலை வாங்கும் கார்ப்பரேட் கம்பெனி வேலையை, நல்ல வேலை என்கிறோம். வேலையை செய்து விட்டு ஊதியம் பெறுபவனை தினக்கூலி என்கிறோம். இவையெல்லாம் முரண்பாடுகள் அல்லவா?
உணவு,உடை,உறையுள் அருளப் பெற்று அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள உழைத்த நம் முன்னோர்களின் அமைதியை நம்மிடம் நான் தேடவே செய்கிறேன். பயங்கள். என்ன வருமோ, வந்தால் இது போதுமா என்ற பயங்கள். அமைதி, துன்பம், வளமான வாழ்வு, நோய்கள், எல்லாமே நாம் அழைத்து வரும் விருந்தாளிகளே . தொந்தரவு தரும் விருந்தினரை எப்போதும் நினைப்போமா, அழைப்போமா? என்னை விட என் சந்ததி இன்னும் அமைதியாக, உள் தேடல் செய்து கொண்டு, வாழ்வைப் படிப்பதே எனக்கு மகிழ்ச்சி. என்னை விட அதிகம் சம்பாதிப்பது அல்ல என்றே நினைக்கிறேன். சொல்லத் தெரியவில்லை. வாழ்வின் இந்த கட்டத்தில், ஒப்பு நோக்க முடிந்த ஐம்பதுகளில், எது சந்தோஷம் என்று ஆழ்மனம் உணர்கிறது. மனதிற்குள் பயணப்பட முயலும் எல்லோருக்கும் தெரிவதுதான்.
ஒரு வாரமாக கொரோனா வைரஸ் இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது. உலகம் முழுதும் உச்சகட்ட பயத்தில் உள்ளது. இயற்கை அவ்வப்போது மனிதனுக்கு அவனை விட தான் பெரிது என்பதை உணர்த்திக் கொண்டேதான் உள்ளது. அத்தியாவசியத் தேவைகள் என்ன என்பதை அடிபட்டு மட்டுமே நாம் உணர்வோம். நம் அறியாமை அப்படி. பால்காரரும், துப்புரவுத் தொழிலாளிகளும், விவசாயிகளும், மருந்து அடிப்பவரும், சிறு வியாபாரிகளும்தான் இன்றைய ESSENTIAL சர்வீஸ் பிரிவில் அடங்குவார்கள். படிப்பாளிகள் வீட்டில் இருந்து வேலை செய்கிறோம். எதுவும் கெட்டுப் போகவில்லை. நாம் வேலைக்கு அமர்த்தி சொற்ப வருமானம் ஈட்டும் தொழிலாளிகள் வாராது போனால் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கிறது. வேடிக்கை பார்க்கிறேன். ஆனால் பாடம் பெறுவோமா என்றால் மாட்டோம். எல்லாம் சரியான பின் மறுபடி நாம்தான் உலகைத் தாங்குவதாக நினைத்துக் கொள்வோம். கர்வம் கொள்வோம்.
பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாட்சப் செய்திகள் வைரஸை விடவும் வேகமாகப் பரவுகின்றன. இன்று முதல் 144 தடை உத்தரவு தமிழ் நாட்டில். பாவம், பலருக்கு வாழ்வே போராட்டம். காரணம் பணம். ஆனால் பணத்தட்டுப்பாடு இல்லாதவர்கள்தான் அதிகம் கவலை கொள்கிறார்கள். விசித்திரங்கள். பொருளிலார் ஆனாலும், பொருள் உளார் ஆனாலும் தேடல் ஒன்றே கலியுகத்தில் என்றே தோன்றுகிறது. பொருள் தேடலை, தப்பாக விமர்சிக்கவில்லை. தேவைகள் பூர்த்தியான பின்னாவது அமைதி தேடலாம். ஆனால் செய்ய முடியவில்லையே, ஏன்? ஏனென்றால், தேவைகளுக்கு வரையறை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 144 அரசாங்கம்தான் போட வேண்டும் என்றில்லை. நமக்கு நாமே போட்டுக் கொள்ளலாம். தடை உத்தரவின் போது உள்ள சாலைகள் போல மனசு ஆரவாரமற்று இருப்பது மகிழ்ச்சி. அத்தியாவசிய நினைவுகளுக்குத் தடை இல்லை. எது அத்தியாவசியம் என்று அறிய முயற்சி வேண்டும்.