கடந்து விட்ட அரை நூற்றாண்டை நின்று திரும்பிப் பார்க்கிறேன். இன்னும் கொஞ்சம் ஓடின பிறகு கூட நின்றிருக்கலாம். ஆனால் ஓட்டம் எத்தனை நாள் தெரியாது. நிகழ்வுகள் மறந்து போகும் சாத்தியக்கூறுகளும் உண்டு. என் வயது ஐம்பத்து ஏழு. முதல் ஏழு வருடங்கள் நான் குழந்தை என்று ஒதுக்கி விடுகிறேன். சுக்ர தசை ஒவ்வொருவருக்கு வாழ்வின் ஒரு பகுதியில் வரும். எனக்கு அது எட்டு வயதில் வந்தது எனலாம். சந்தோஷம் தவிர வேறொன்றும் அறியா பத்து ஆண்டுகள். அன்பான வீடு சுகம். பசி அறியா வயிறு சுகம். நன்றாகப் படிப்பு வருவது சுகம். கொண்டாடப்பட்ட முதல் மாணவியாய் இருத்தல் சுகம். நினைத்தது கிடைத்தது சுகம். வேலை செய்யவே தேவை அற்று இருந்தது சுகம். வசை மொழி என்றால் என்ன என்பதே அறியாதிருந்தது சுகம். ஆனால் சக்கரம் என்றால் சுற்றியே ஆக வேண்டும். நிற்றல் அதன் தன்மையல்ல . வாழ்க்கைச் சக்கரமும் அப்படித்தான்.என் வாழ்க்கைச் சக்கரமும் சுற்றி வருகிறது. பாதி முடித்து விட்டது. பாதைதான் சற்று கரடுமுரடாக ஆனது. வண்டியை ஓட்டுபவன் நினைத்தால் சக்கரத்திற்கு சேதம் இல்லை. மனித ஓட்டுனர்கள் திறமையானவர்கள் அல்லர்.
இந்தத் தருணம் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி உலகை உலுக்கிக் கொண்டுள்ளதால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளோம். அரசின் ஆணை. தனிமைப் படுத்திக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப் பட்டிருக்கிறோம். உடலால் தனிமைப் படுத்திக் கொள்வது வைரஸ் பரவுவதைத் தடுக்குமாம். உடலை பாதிக்கும் நுண்கிருமி வைரஸ். மனதை செயல்பட விடாது முடக்கும் வைரஸ் உண்டு. அதற்கும் தனிமைப் படுத்திக் கொள்வதே தீர்வு. எதை? மனதை. சாலைகள் அமைதிப் பூங்காவாக உள்ளன. மாசு இல்லை. அமைதி. வாகனங்களின் அசுரவேகம் இல்லை. விபத்துகள் இல்லை. சண்டைகள் இல்லை. மனம் வெளியே அலையாமல் இருந்தாலும் இதே நல்ல விளைவுகள் நிகழும். இது யோசிக்க வேண்டிய நேரம். பொழுதுபோக்கு கேளிக்கைகளில் ஈடுபட வேண்டிய தருணம் இல்லை. இயற்கை அன்னை தேவை ஏற்படும் போது குறுக்கிட்டு உலகை சமநிலைக்குக் கொண்டுவருகிறாள். நாம் ஒத்துழைத்தால் இன்னும் வேகமான முன்னேற்றங்கள் நிகழும். ஆனால் பத்தாம் வகுப்புப் பாடத்தை பரீட்சை முடிந்தவுடன் மறந்து போகும் மாணவன் போல் நாம் மறுபடி எல்லாக் குளறுபடிகளும் செய்வோம்.
யோசிக்க நிறைய நேரம் உள்ளது. உடல் அடைந்த அனுபவங்களை அசை போடுகிறேன். இந்தப் பதினைந்து நாட்களில் எதையாவது மிஸ் பண்ணினேனா? இல்லை. ஏனோ தெரியவில்லை. எல்லாவற்றில் இருந்தும்,எல்லாரிடத்திருந்தும் விலகி இருப்பது ஒரு வித அமைதிதான். நமக்கு யாரும் தேவை இல்லையா நாம் யாருக்கும் தேவை இல்லையா? தெரியவில்லை. என் அம்மா, உடன்பிறப்புகள் தவிர யாரும் என்னைத் தேடவில்லை. நானும் யாரையும் தேடவில்லை. என் குடும்பம் கூடவே உள்ளதால் அவர்கள் பற்றி சொல்லவில்லை. நான் சொல்வது ஒரு நல்ல மனநிலையில் இருந்துதான். எல்லார் நினைவும் அடி மனதில் உள்ளது. ஆனால் உறங்கிக் கொண்டு மட்டுமே உள்ளது. இதுதான் சரியான இருப்பு, என்னளவில். நேற்று ப்ரம்மகுமாரி ஷிவானி அவர்களின் பேச்சு கேட்டேன். பற்று, அன்பு இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகாக விளக்கி இருந்தார்கள்.
பற்று நம்மைப் பிடித்துக் கொள்கிறது. கவலை கொள்ள வைக்கிறது. நீ எனக்காக பிரார்த்தனை செய்வாயா, நானும் உனக்காகப் பண்ணுவேன். நீ என்னை நினைத்து மகிழ்வாயா, நானும் அதையே செய்வேன். நீ என்னை நினைத்து அழுவாயா, நானும் உனக்காக அழுவேன். உன் பிரச்சினை எல்லாம் என்னதும். எனக்கு ஏதோ ஒன்று என்றால் நீ அதை உன் சொந்த பிரச்சினை போல் நினைக்க வேண்டும். இந்த மாதிரி பற்று, உதவியை விட உபத்திரவம்தான். நமக்கென்று சில நல்ல குணங்கள் உண்டு. எதிரே உள்ளவர் யாரானாலும், எப்படிப் பட்டவரானாலும், என்ன செய்தாலும் மாற்றிக் கொள்ள இயலாத ஒன்று. அது பிணைப்பதில்லை. இந்த இருபது நாட்கள் எதை நாடினோம்? எதையும் இல்லை. அதற்கு ஏன் அரசு உத்தரவு வேண்டும்? நாம் அனைவரும் நல்லவர்கள். நமக்கு நம்மை விட யார் நன்மை செய்ய இயலும்? என்ன, வேறு வேலை இல்லை என்றால் மட்டுமே, செய்ய வேண்டிய விஷயம் என்றில்லாது தினம் ஐந்து நிமிடமாவது செய்து கொள்ளும் சுயபரிசீலனை, போக்குவரத்தற்ற சாலை போல் மனதைத் தெளிவாக்கும்.