இன்றைய பொழுது விடிந்தது. ஒவ்வொரு விடியலும் ஒரு செய்தியுடன் ஒரு Aspiration உடன் விடியும். Wait. இந்த நாளை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்த பின் Post க்குள் செல்லலாம். நம் நினைவு அடுக்குகளில் உள்ள பல மனிதர்களில், பல விஷயங்களில், ஏதோ ஒன்று அல்லது நிகழ்கால சாதா நிகழ்வொன்று தரும் அழுத்தம் அல்லது மகிழ்ச்சியுடன் விடியல் நிகழும். சூரியன் தன் பயணம் தொடங்கி சில மணி நேரம் சென்றபின் துயில் எழுந்தால் அந்தந்த நாளுக்கு என்ன செய்ய வேண்டும், இன்று என்ன சமையல், எந்த வங்கிக் கணக்கு Mature ஆகிறது, அதைத் துடைக்கணும், வண்டியில் பெட்ரோல் தீர்ந்திருக்குமே, இன்று குழந்தைக்கு ஃபீஸ் கட்டணுமே, சாய்சங்கரா மேட்ரிமோனில வந்த கோயம்புத்தூர் பையன் ஜாதகம் நம்ம பொண்ணுக்கு சேருமா, அவன் தலைல இப்பவே வழுக்கை எட்டிப் பார்க்கிறதே, இன்று அந்த சிடுமூஞ்சி Boss ஐ எப்படி சமாளிப்பது, காஸ் சிலிண்டர் நாம் இல்லாத சமயம் வந்தால் யார் வாங்கி வைப்பார்கள் என்ற பல முக்கிய விஷயங்களே மனதை ஆக்ரமிக்கும். கிண்டலாகச் சொல்லவில்லை. எல்லாம் முக்கியம்தான். கர்மபூமியில் இருந்து கொண்டு, அதைக் கிண்டல் செய்து, வித்தியாசமாக இருப்பதாய் நினைத்துக் கொண்டு சும்மா இருக்க இயலாது. எந்த Realisation ம் இங்கேயே நடக்க வேண்டும். இன்று சூரியனை முந்திக் கொண்டேன். அதனால் சுற்றுப்புறம் முழு மோனம். மனதுக்குள் ஒரு வாக்கிங். தனியாக. சுகமாக.
ஒவ்வொரு நாளுமே நீண்ட வாழ்க்கைக்கு ஒப்பானதுதான். பல தவறுகள், திருத்திக் கொள்ள நேரம் இருப்பதாய் நாம் நினைப்பதால் நிகழ்பவையே.Indifference, கோபம், அலட்சியம்,Depression,பயம், பொய் இவற்றுக்கெல்லாம் ஏது நேரம். ஒவ்வொரு நாளும் மனசுக்குப் பிடித்ததை, நல்லதை, சக ஜீவன்களுக்கு இணக்கமானதை செய்து விட்டுப் போகலாமே. கடவுள் படைப்பில் வெவ்வேறுஉயிரினங்களுக்கு வெவ்வேறு Life Span உண்டு. ஒரு நாள், இத்தனை வருடங்கள் என்ற கணக்கு உண்டு. நமக்கு ஒன்றும் தெரியாது. தெரியாதவற்றுடன் விளையாடக் கூடாது. தினமுமே சரியாக இருக்கவே வேண்டும்.
இன்று பகுள பஞ்சமி. த்யாகராஜஸ்வாமி ஆராதனை. பிரபல பாடகர்கள் கலந்து கொண்டு மாஸ்க் வழி பாடினார்கள். அதில் மிகவும் முதியவர் ஒருவர் கலந்து கொண்டார். குரங்கில் இருந்து வந்த நாம் மறுபடி குரங்காகி மறைகிறோம். யௌவனம் கர்வம். ஆனால் எந்த ப்ரயோஜனமும் இல்லை அந்த கர்வத்தால். முதுமை முகத்தில் கோலம் இடுகிறது. ஆனால் அது ஒரு அழகே. இப்போது எனக்கும் வயதானதால் கூறவில்லை. எப்போதுமே குழந்தைகளும் முதியவர்களும் அழகுதான். வெகுளித்தனம் அழகு. அனுபவம் அழகு. நடுப்பட்ட யௌவன கர்வம் அழகில் சேர்த்தி இல்லை. ஆனால் அந்த ஈகோ துளியாகிலும் இருப்பதாலேயே பூமியில் வாழ்வு சாத்தியமாகிறது.மறுபடி அந்த பெரியவருக்கு வருவோம். Explicit ஆக சொல்ல தயக்கமாக உள்ளது. அவரைப் பார்த்து ஆஞ்சனேய ஸ்வாமிதான் வந்து உட்கார்ந்துள்ளார் எனத் தோன்றியது. முகம் மனித முகமாகவே இல்லை. ஆனால் அப்படி ஒரு தேஜஸ் அந்த முகத்தில்.மனித குலத்துக்கு பற்பல கண்டுபிடிப்புகளை வழங்கிய மேதைகள் பலர் உள்ளார்கள். அவற்றில் பல தவிர்க்க இயலாத பிரிவின் கீழ் வருபவை. Electricity யில் தொடங்கி இண்டர்நெட் வரை. ஆனால் பாட்டும் கவிதையும் அந்தப் பிரிவில் வராதவை. அது போன்ற ஒன்றை செய்து காலம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மஹானுபாவருக்கு ஒரு ஆராதனை. அவர் கூறுகிறார் எத்தனை மஹானுபாவர்கள் உண்டோ அந்தரிகி வந்தனமு என்று.
எனக்கு அந்த Humility வராதா என்று உள்ளது. என்னமோ முயற்சி செய்து கொண்டுள்ளேன். அல்லது அப்படி நினைத்துக் கொண்டுள்ளேன். ப்ரபஞ்சத்துடன் ஒன்றுபட்ட ஒரு வாழ்வில் கருத்து வேறுபாடுகளுக்கும் கலகங்களுக்கும் அவசியம் என்ன? பல முறை செதுக்கப்பட்ட பின்னரே சிலை வடிவம் பெறுவது போல, செதுக்கப் பட்டுக் கொண்டுள்ளேன். உளியால் வாங்கும் அடி போன்ற நிகழ்வுகள். ஆனால் அது நல்லதே. முழுமை அடைந்த சிலையே உபயோகமாகும். சிலை விஷயத்தை எடுத்துக் கொண்டால் சிற்பிதான் செதுக்கும் வேலை செய்ய வேண்டும். நாம் உயிர்ச் சிற்பங்கள். நாமே நம்மை அழகிய சிற்பமாக்கிக் கொள்ள இயலும். கண்ணாடி முன் நின்று, பௌடர் போதுமா கண்மை சரியாக உள்ளதா என்று பார்ப்பது போல மனக் கண்ணாடியில் பார்த்தால் எவற்றை வெட்ட வேண்டும் என்று புலப்படும். கற்சிலைகளை வடிவமைக்க வேண்டும். ஆனால் நம் போன்ற உயிர்ச் சிற்பங்களில் வேண்டாததை வெட்டினால் மட்டும் போதும்.போஸ்ட் பல விஷயங்களுக்குப் பயணித்து விட்டது. அதனால் ஓய்வெடுக்கப் போகிறது.