பத்மஸ்ரீ, கலைமாமணி கதிரி கோபால்நாத் மறைவுச் செய்தியுடன் அன்றைய நாள் தொடங்கியது. வயசு ஏற ஏற மனிதர்கள், மாமனிதர்கள் எல்லோரின் மறைவும் அதிர்ச்சியை விட, ஆழமான, வலியையே உண்டுபண்ணுகிறது. ஒரு மிக வித்தியாசமான வாத்தியத்தைக் கையாண்டு, அதில் எந்த உயரம் தொட இயலுமோ தொட்டு , அவர் உறங்கினதால் சாக்ஸபோன் தூங்கி விடுமோ என்ற அச்சம் உண்டு பண்ணும் அளவு சிறப்பாக வாழ்ந்த மனிதர் நேற்று இருந்தார், இன்று இல்லை. என்ன, அவர் கொஞ்சம் முன்னால் பயணம் தொடங்கினார், முன்னால் முடித்து விட்டார். நாம் மட்டும் தொடர்பயணமா செய்யப் போகிறோம் என்ற தெளிதல் . ஆனால் ரொம்ப யோசித்தால், நம் அனைவரதும் தொடர் பயணமே. இறங்கி, இறங்கி,வேறு உடல் மாற்றி,நம் ஆத்மா செய்யும் பயணம்.
நல்ல நாளில், நட்சத்திரத்தில் பிறப்பு நிகழ வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறோம்.. இறுதி நாளுக்கும் அது பொருந்தும். எவ்வளவு பெரிய கலைஞர், எத்தனை முக்கியமான செய்தி. ஆனால், வேண்டாத செய்திகளை மணிக்கணக்காகத் தரும் ஒரு தொலைகாட்சி சேனல் கூட, அவர் மறைவுச் செய்தியை இரண்டு நிமிஷம் கூடக் காட்டவில்லை, நான் அறிந்த வரை. ஏன் தெரியுமா? சீனப் பிரதமருடைய இந்திய, தமிழ்நாட்டு விஜயத்துடன் இந்நிகழ்வு சேர்ந்து விட்டதால். சீனப் ப்ரதமருடைய ஒவ்வொரு வேளை சாப்பாடும் என்ன, அவர் கார் எத்தனை கோடி என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகம், ஒரு இரண்டு நிமிஷ இரங்கல் செய்தி கூட சாக்ஸபோன் சக்ரவர்த்திக்குச் சொல்லவில்லையே என்றிருந்தது. எதற்கு சில நிகழ்வுகளுக்கு மட்டும் இத்தனை ஆர்பாட்டம் என்ற கோபமும் வந்தது. ஆனால், அது பெரிய தவறில்லை. பண்டைக் கால அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறெல்லாம் மரியாதை செய்யப்பட்டதுதானே? இப்போது ராஜாக்கள் இவர்கள். கொண்டாட்டம் ஓ கே தான். ஆனால் அந்தக்காலத்து அரசர்களே கலைஞர்களுக்குத் தனி இடம் அல்லவோ கொடுத்தார்கள்!! பிரதமர்,மோடி அவர்கள் " என் எண்ணம் கோபால்நாத்தின் குடும்பத்துடன் உள்ளது " என ட்வீட் செய்திருந்தது சற்று மனதை சாந்தமாக்கியது.
தொழில்நுட்ப வளர்ச்சியும்,மனித நேயமும்,தலைகீழ் விகிதத்தில் உள்ளன. முகத்தில் அறைவது போல் இருந்தாலும் உண்மை அதுதான். வானம் பார்த்து நேரம் கணக்கிட்ட, ஆதி மனிதனின் எளிமையை தொழில்நுட்பம் என்ற பூதம் விழுங்கி விட்டது. அகஸ்திய மாமுனிவர் வாதாபியை ஜீரணம் செய்தது போல் , எளிமையை, முழுமையாக ஜீரணம் பண்ண முடியவில்லை. காரணம், அங்கங்கே மனதால் சிந்திப்பவர்களும் இருப்பதால். ஆனால் அவர்கள் வாயைத் திறந்தால் , அவர்களை மனநிலை பிறழ்ந்தவர் போல் பார்க்கிறோம். அல்லது கோபம் கொள்கிறோம். நடந்த கலைநிகழ்ச்சிகள் ஜாதி வித்தியாசங்களைக் காட்டியது என்று டி . எம் .கிருஷ்ணா கருத்துத் தெரிவித்தால் அவர் மேல் பாய ஒரு கும்பலே தயாராக உள்ளது. மீ டூ விவகாரம் ஒரு முப்பது நாள்களுக்கு வெறும் வாய் மெல்பவர்களுக்கு அவலானது. அப்போதைக்கப்போது, ஒரு பரபரப்புக்காக எதிலேனும் ஈடுபடுவது. இது வருந்தத் தக்க நிலை அல்லவா? ஆப்பிள் என்றால் இப்படி இருக்கும். ரோஜா என்றால் இப்படி இருக்கும். யானை என்றால் இப்படி இருக்கும். மயில் என்றால் இப்படி இருக்கும். அதே போல் எளிதாக, மனிதன் என்றால் இப்படி இருப்பான் என்று சொல்வது எப்படி சாத்தியம்? அவனுக்கு மனம் என்ற ஒன்று அதிகப்படியாக உள்ளதே? அதுதானே அவனை வேறுபடுத்திக் காட்டும் விஷயம்? மனம் செம்மைப் பட்டால்தான் மனிதன். இல்லை என்றால் அவனும் ஒரு இருகால் விலங்கினமே .
மனிதனாய், மாமனிதனாய் ஒருவர் வாழ்வது கொண்டாடப் பட வேண்டிய ஒன்று. அவர்கள் மறைவு சாதா நிகழ்வல்ல. கட்டுரை எழுதும் நேரம் பூரவும் கதிரி கோபால்நாத் அவர்களின் கம்பீரமான பாக்யாத லக்ஷ்மி பாரம்மா மனதில் ஒலிக்கிறது. அதுவே பெரும்பாலும் அவர் கச்சேரிகளின் மங்களமாக இருந்துள்ளது. மனம் மௌன அஞ்சலி செய்கிறது. மனதை லகுவாக்க ஒன்று கூற வேண்டுமானால், அவருடைய அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடல் மூலம் திரையிசையை அதிகம் நேசிக்கும் எண்ணற்றோர் மனதிலும் ஒரு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர். அடுத்த கட்டுரை சந்தோஷமான நிகழ்வு பற்றிப் பேச இறைவன் அருளை யாசிக்கிறேன்.

No comments:
Post a Comment