மாம்பழம் ருசி. வண்டு உள்ள மாம்பழத்தை வெளிப்பார்வையில் இருந்து கண்டறிய இயலாது. சாப்பிடவும் லாயக்கில்லை. நறுக்கினபின்னே தெரிய வரும். மனிதனை, அவன் மனதை கீறிப்பார்த்து, பழக ஆரம்பித்தோமானால், உலகம் போர்க்களமாகும். வண்டு துளைக்காத மாம்பழங்களே அதிகம். ஏதோ ஒன்றிரண்டை வண்டு துளைத்திருக்கும். ஆனால், நாம் அனைவரும் வண்டு துளைத்த மாங்கனிக்கு ஒப்பான மனிதர்கள்தான் என்பது பரிதாபகரமான உண்மை. "நான் அப்படி இல்லை, முழு சுத்தம், ரொம்ப நல்லவன்" என்று கூறிக்கொண்டோமானால், அந்தக் கூற்றே ஒரு சிறு வண்டுதான் . ஈகோ வண்டு . ஆனால்,பழத்தைத் தூக்கிப் போடலாம். சகமனிதர்களைத் தூக்கி ஏறிய இயலாது. வண்டுப் பகுதியை வெட்டி விட்டுப் பழத்தை உண்ணுவது போல், வேண்டாததை விட்டு, வேண்டியதை விழுங்கி நடத்தும் நாடகமே வாழ்வு. நல்ல பகுதியை உண்ணும் போது வண்டிற்காக வெட்டின பகுதி நினைவில் வந்தால் பழம் ருசிக்காது. சகமனிதனின் குறைகள் மேல்மனத்திற்கு வரின் வாழ்க்கைப் பயணமும் ருசிக்காது.
இன்று ஏன் இந்த யோசனைகள்,தெரியவில்லை. சில சமயம், "ஓ, களையப்பட வேண்டியவை நம்மிடம் இவ்வளவு உள்ளதா!" என்று தோன்றுகிறது. பற்று, எதிர்பார்ப்பு, கோபம், துடுக்குப் பேச்சு,சந்தேகம் என்று எல்லா மனிதர்களிடமும் ஒரு லிஸ்ட் உண்டு. இவையெல்லாம் தைரியமான திருடர்கள் போல கூட வரும். " நான் திருடன்தான், முடிந்தால் பிடித்துத் துரத்து. மறுபடி எப்போ வேண்டுமானாலும் திருட வருவேன், அதாவது உன் அமைதியைத் திருட" , என்று சவால் விடும் குணங்கள். இவைகளைத் துரத்த முடியும். மறுபடி வர பயம் கொள்ளுமளவு விரட்ட முடியும், கவனமாக இருந்தால். அலட்சியம் காட்டினால் , திருட்டு நடக்கும்.கவனம் என்றால் விழிப்பு. எப்போதும், உண்மையாய், விழித்திருத்தல். நாம் தவறின் பக்கம் போகும் போது , நம்மைத் தடுப்பது ஒரு விழிப்பு நிலை. அந்த ஒவ்வொரு நிகழ்வையும், வேகமாக முன்னேற வாய்ப்பாகப் பார்ப்பதும் விழிப்பு. இரண்டும் தேவை.
நன்றாக வாழ, யோசிக்க, கஷ்டப்பட வேண்டும் , தியாகம் செய்ய வேண்டும் என்ற நினைவு வந்தால் அது உண்மை அல்ல. இந்தக் கூற்றின் மறுபக்கமே உண்மை. நல்ல நினைவும் வாழ்க்கை முறையும் ஒரு மகிழ்ச்சியான, துன்பங்கள் தீண்டாத நிலை. மேல் பார்வையில் தெரியும் சிலவற்றை சுரண்டிப் பார்த்தால் உள்ளே என்ன உள்ளது தெரியும்.There is a life behind appearances . கடல் நீரைத் தொடலாம். காற்றை? தொட இயலாது. உணர மட்டுமே செய்யலாம். உலகில் உணரும் பொருள்களும் உண்டு. தொடும் பொருள்களும் உண்டு. நம் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகும் நாள் நல்ல நாள், ஒரு சிறிய அடி வாங்கினால், அது கெட்ட நாள் என்று நினைக்கிறோம். தப்பு. அது நம்மை ஒரு படி மேலே ஏற்றி விட கடவுள் தரும் வாய்ப்பு என்பது, காற்று போல் உணர வேண்டிய ஒன்று. இந்தத் தருணம், ஒரு அழகான நிகழ்வை பகிர விரும்புகிறேன். காலை, ரோஜாப்பூ வாங்க சென்றோம். பல வண்ண ரோஜா மலர்கள். ஒரு குழந்தையை,ரோஜாப்பூ என்ன நிறம் என்று கேட்டால் அது குழம்பி விடும். நாம் குழந்தையாய் இருந்த போது ரோஸ் நிறம் என்று உடனே கூறுவோம். மஞ்சள் என்று பதில் கூறினால், டீச்சர் தலையில் கொட்டுவார்கள் . இப்போதைய குழந்தை, வேறு ஏதேனும் கலர் சொன்னால், டீச்சருக்கு பயம் வந்து விடும். "ஓ,நேற்று இந்தக் கலரில் ஒரு ரோஜா வந்து,நமக்குத் தெரியவில்லையோ, குழந்தையின் பதில் தப்பு என்று கூறினால்,அதன் சைக்காலஜியை கெடுத்து விட்டீர்கள் என்று அதன் பெற்றோர் வந்து விரட்டுவார்களோ" என்று.
சரி, இப்போது அதில்லை பிரச்சினை. தொன்று தொட்டு உள்ள, ரோஸ் என்ற இளம் ரோஸ் நிற பூவை சுற்றி வண்டுக்கூட்டம். அவை மற்ற நிறங்களில் உள்ள ரோஜாப்பூக்களை திரும்பியும் பார்க்கவில்லை. அந்தப் பூக்கார அம்மா சொன்னார்கள். அந்த ஒரிஜினல் ரோஜாக்கள் தீரும் வரைதான் அந்த வண்டுகள் அங்கே சுற்றுமாம். எனக்கு கண்கள் பனித்தது . இந்த வித்தியாசம்தான், இறைவன் படைப்புக்கும், மனிதன் படைப்புக்கும். மனிதன் தவிர மற்ற ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் இயல்பாக உணரக் கூடியவற்றை மனிதனால் செய்ய முடிவதில்லை. தொடக்கூடிய கடலை நம்பும் அவனுக்கு காற்றின் இருப்பை உணர்வதில் சிரமம் உள்ளது. நம்மையும் அவன்தான் படைத்தான், ஆனால் நம் அறிவை,பேரறிவாக்கும் என்று நினைத்து, நாம் செய்து கொண்டுள்ள சிக்கல்கள், கொஞ்சமில்லை. இன்று என்னவோ வண்டு எட்டி எட்டிப் பார்க்கிறது.
மாம்பழத்தின் சிறு வண்டுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா? நமக்கே இனம் காண இயலாது , நமக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மோசமான எண்ணங்கள் உண்டு. அவை இருப்பதை நாம் உணர விரும்பாததால் உணர்வதில்லை. அவை மேலே சொன்னவற்றையும் விட சீரியஸ் ஆனவை. ஏனென்றால், கோபதாபங்கள் வெளியே தெரியும் தன்மையன. தப்பு என்று நிதர்சனமாய்த் தெரிவன. சரி போலத் தென்படும், நம்மை நாமே சமானப் படுத்திக் கொள்ளும் , அழகான போர்வை போத்திக் கொண்ட கெட்ட பழக்கங்கள் உண்டு. சபிப்பது, பழிவாங்க எண்ணுவது, நமக்குப் பிடிக்காதவர்களின் துன்பத்தை ரசிப்பது , மித்ரபேதம் செய்வது, என்று பல. இவை வெளியே தெரிவதில்லை. ஏனென்றால், இந்த எண்ணக்கலவையை வைத்துள்ள பாத்திரம் ஆழ்மனது. மேல்மனது கட்டளை இட்டு வாய் நல்ல செய்தியை தான்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கும். கண் மூடி அமைதி காத்து யோசித்தால் மட்டுமே மனம் முழு சுத்தமா என்று புலப்படும். உண்மையாய்த் திருந்த விரும்பினால் மட்டுமே அழுக்குகள், அடைப்புகள் வெளிவரும். வந்தால்தான் அவற்றை நீக்கலாம். நம்மை சோதனைக்கு உள்ளாக்கிக் கொள்வதே வழி.

No comments:
Post a Comment